தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சத்துணவையும் கண்காணிக்குது உணவு பாதுகாப்புத்துறை

சத்துணவையும் கண்காணிக்குது உணவு பாதுகாப்புத்துறை

சத்துணவையும் கண்காணிக்குது உணவு பாதுகாப்புத்துறை


UPDATED : செப் 11, 2015 12:00 AM

ADDED : செப் 11, 2015 10:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 11, 2015 12:00 AM ADDED : செப் 11, 2015 10:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்
: பள்ளி, அங்கன்வாடி மையம், அரசு மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு, சத்துமாவு போன்றவற்றை கண்காணிக்க, உணவு பாதுகாப்புத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓட்டல், உணவு நிறுவனங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி கண்காணிக்கின்றனர். பள்ளி, அங்கன்வாடி மையம், மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு பொருட்களை அந்தந்த துறை அதிகாரிகளே ஆய்வு செய்கின்றனர்.

இருந்தபோதும் தரமற்ற உணவு வழங்குவதாக புகார்கள் எழுகின்றன. இதையடுத்து பள்ளி, அங்கன்வாடி மையம், விடுதிகளில் வழங்கப்படும் உணவு, சத்துணவு, சத்துமாவு போன்றவற்றின் தரம் குறித்து ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 

திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சாம்இளங்கோ கூறுகையில், பள்ளி, அங்கன்வாடி மையம், விடுதிகளில் விரைவில் ஆய்வு நடத்த உள்ளோம். இந்த அறிக்கை கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும்என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us