பெண் கல்வி முக்கியத்துவம்; கவர்னர் வஜுபாய்வாலா விளக்கம்
பெண் கல்வி முக்கியத்துவம்; கவர்னர் வஜுபாய்வாலா விளக்கம்
UPDATED : செப் 13, 2015 12:00 AM
ADDED : செப் 13, 2015 04:50 AM
மங்களூரு: பெண்களின் திறமையை தவறாக கணக்கிடக் கூடாது. ஒரு மாணவர் கல்வி பெற்றால், அது அவருக்கு மட்டுமே பயன்படும். ஆனால், ஒரு பெண் கல்வி பயின்றால், அவரது குடும்பத்துக்கே சமமானது, என, கவர்னர் வஜுபாய் வாலா தெரிவித்தார்.
மங்களூரு, மங்களதேவி ராமகிருஷ்ண மடம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், கவர்னர் வஜுபாய் வாலா பேசியதாவது:
இளைஞர்கள் நாட்டின் சொத்து. சோம்பேறித்தனத்தை விட்டு விட்டு, சாதிக்க முயற்சிக்க வேண்டும். உலகை மாற்ற உங்களுக்கு சக்தியுள்ளது. நம் பாரம்பரியம், கலாசாரத்தை மறந்து விட்டோம். தற்போது, எதிர்காலத்தை மனதில் வைத்து, மாணவர்களுக்கு ஆசிரியர் கல்வி கற்பிக்கும் முறை உள்ளது.சிறந்த கருத்துக்களை மாணவர்களுக்கு போதியுங்கள். நாட்டின் எதிர்காலம் இன்றைய தலைமுறையினர் கையில் உள்ளது.
ஏழைகளுக்கு உதவி செய்யும் குணம் அல்லது மனப்பான்மை மாணவர்களுக்கு இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதரும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ வேண்டும்.இந்நாட்டில் பிரதமரோ அல்லது பெரிய மனிதரோ, தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரை பார்த்து தலைவணங்கியே ஆக வேண்டும்.
நீங்கள் எவ்வளவு அறிவுள்ளவராக இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. பெண்கள்
வலுவற்றவர்கள் என்று யார் கூறியது? இந்நாட்டின்
ஜனாதிபதியாக இருந்தவர் பிரதிபா பாட்டீல். பெண்களின் திறமையை தவறாக கணக்கிடக்
கூடாது. ஒரு மாணவன் கல்வி பெற்றால், அது அவருக்கு மட்டுமே பயன்படும். ஆனால், ஒரு பெண் கல்வி பயின்றால், அவரது குடும்பத்துக்கே சமமானது. இவ்வாறு அவர்
கூறினார்.
