UPDATED : செப் 14, 2015 12:00 AM
ADDED : செப் 14, 2015 10:05 AM
புதுச்சேரி
: புதுச்சேரி கல்லுாரிகளில் ராகிங்கை
தடுக்க பறக்கும் படை ஏற்படுத்த வேண்டும் என, எஸ். ஆர். எஸ்., இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
எஸ்.ஆர்.எஸ்., இயக்க பொது செயலாளர் பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி மருத்துவ கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, சட்டக்கல்லுாரி, பல்கலைக் கழகம் ஆகியவற்றில் சமீப காலமாக ராக்கிங் கலாசாரம் தலைதுாக்கியுள்ளது. இதனை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி தலைமை செயலர், கல்வி, சுகாதாரத் துறை செயலர்கள், போலீஸ் ஐ.ஜி., மற்றும் அனைத்து கல்லுாரி முதல்வர்கள், நிர்வாக அதிகாரிகள் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த வேண்டும்.
இந்த
ஒருங்கிணைப்பு குழுவானது, பறக்கும் படையை அமைத்து, அனைத்து கல்லுாரிகளிலும் ராக்கிங் நடக்காத வகையில் தீவிர கண்காணிப்பை
ஏற்படுத்த வேண்டும். இது குறித்து அனைத்து கல்லுாரிகளும் தொடர் அறிக்கை தர
அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்கள் தங்களுக்கு ராக்கிங் மற்றும் இடர்பாடுகள் இருப்பின் நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் பொருட்டு புகார் பெட்டி வைக்க வேண்டும். மாணவர்கள் இந்த கமிட்டியினை அறிந்து கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
