தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவம் சார் படிப்பு 1,200 இடங்கள் காலி

மருத்துவம் சார் படிப்பு 1,200 இடங்கள் காலி

மருத்துவம் சார் படிப்பு 1,200 இடங்கள் காலி


UPDATED : செப் 21, 2015 12:00 AM

ADDED : செப் 21, 2015 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2015 12:00 AM ADDED : செப் 21, 2015 10:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார் பட்டப் படிப்புகள் உள்ளன. முதற்கட்ட கவுன்சிலிங்கில் அரசிடம் உள்ள, 550 இடங்கள் உட்பட, 2,700 இடங்கள் நிரம்பின. 

சுயநிதி கல்லுாரிகளில் மீதமிருந்த, 4,500 இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில், 14ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. மொத்தமுள்ள, 7,200 இடங்களில், 1,200 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன; இந்த இடங்களை யாரும் எடுக்க முன்வரவில்லை.

இதற்கான அடுத்த கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட மாட்டாது; சுயநிதிக் கல்லுாரிகளே, மீதி இடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us