தலைமை ஆசிரியர் பதவி உயர்வு; பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு; பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை
UPDATED : செப் 21, 2015 12:00 AM
ADDED : செப் 21, 2015 10:55 AM
தேனி
: பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின்
மாவட்ட கிளை கூட்டம் தேனியில் நடந்தது. மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆண்டிபட்டி வட்டார தலைவர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில், பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி என வேறுபாடு கருதாமல் தொடக்க கல்வி துறையில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவேண்டும். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கே வழங்க வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தவேண்டும்.
அறிவியல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பதவியினை அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை கொண்டே நிரப்பவேண்டும். 2004 முதல் 2006 வரையிலான தொகுப்பூதிய பணிக்காலத்தினை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். ஜாக்டோ சார்பில் அக்டோபர் 8 நடைபெறும் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வது என்பது உட்ப பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
