தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு

9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு

9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு


UPDATED : செப் 23, 2015 12:00 AM

ADDED : செப் 23, 2015 10:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2015 12:00 AM ADDED : செப் 23, 2015 10:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கும் ஊரக திறனாய்வு தேர்வு செப்., 27ம் தேதி நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தில் 956 பேர் இத்தேர்வினை எழுதுகின்றனர்.

எட்டாம் வகுப்பு தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசு ஊரக திறனாய்வு தேர்வு நடத்துகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக நான்கு ஆண்டுகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் அரசு வழங்கும். இத் தேர்வில் கிராம பகுதியில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்க தகுதி உடையவர்கள். இரண்டு மாதங்களுக்கு முன் ஊரக திறனாய்வு தேர்விற்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் செப்., 27ம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு காலை 10 மணிக்கு துவங்கி 12.30 மணி வரை இரண்டரை மணிநேரம் நடைபெறும். தேனி மாவட்டத்தில் மூன்று மையங்களில் இத் தேர்வு நடைபெறுகிறது. தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 389 பேரும், தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 268 பேரும், போடி ஜமின்தாரணி காமுலம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 300 மாணவ, மாணவியர் உள்பட 956 பேர் மாவட்டத்தில் திறனாய்வு தேர்வு எழுதுகின்றனர். தேர்விற்கான வினாத்தாள் மாவட்ட கல்வி அலுவலக அறையில் வைத்து சீல் வைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us