தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முத்தாக ஜொலிக்கும் மூன்று சிறுவர்கள்

முத்தாக ஜொலிக்கும் மூன்று சிறுவர்கள்

முத்தாக ஜொலிக்கும் மூன்று சிறுவர்கள்


UPDATED : டிச 31, 2023 12:00 AM

ADDED : டிச 31, 2023 08:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2023 12:00 AM ADDED : டிச 31, 2023 08:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கலபுரகி:
காந்தாரி வித்தை எனப்படும் கண்களை கட்டிக் கொண்டு விளையாடும் பயிற்சியைப் பெற்று அசத்துகின்றனர் மூன்று சிறுவர்கள்.இன்றைய சிறார்களிடம், பல திறமைகள் ஒளிந்துள்ளன. சிலர் மட்டுமே, திறமைகளை வெளியே கொண்டு வந்து ஜொலிக்கின்றனர். அதே போன்று, கலபுரகியில் உள்ள மூன்று சிறுவர்களிடம் அதிசய திறன் உள்ளது. கண்களை கெட்டியாக கட்டினாலும், எந்த தங்கு தடையும் இல்லாமல், அனைத்து பணிகளையும் செய்கின்றனர்.கலபுரகி சிஞ்சோலியில் உள்ள வீரேந்திர பாட்டீல் பள்ளியில் நான்காவது வகுப்பு படிக்கும் குரு பிரசாத், 9, ஐந்தாம் வகுப்பின் பிரஜ்வல், 10, ஏழாம் வகுப்பு படிக்கும் பிரதீக், 12 ஆகியோருக்கு, அதிசய திறன் உள்ளது. பிரஜ்வல்லும், பிரதீக்கும் அண்ணன், தம்பி குருபிரசாத் இவர்களின் உறவினர்.கை தேர்ச்சி
பல்லாரியின் அமைப்பு ஒன்றில், காந்தாரி வித்தையை கற்றுள்ள சிறுவர்கள், அதில் கை தேர்ந்துள்ளனர். அதாவது, கண்களை கட்டி விட்டு இவர்களின் முன்னால் எந்த பொருட்களை வைத்தாலும், அதன் நிறத்துடன் கூறும் திறன் உள்ளவர்கள். ரூபாய் நோட்டுகளை கொடுத்தால், அதன் மதிப்பு, அதில் அச்சிடப்பட்டுள்ள சீரியல் எண்களையும் தெளிவாக கூறுகின்றனர்.அவர்கள் முன்னால் யாரை நிறுத்தினாலும், அவர்கள் யார், என்ன நிறத்தில் உடை அணிந்துள்ளனர் என்பதை கூறி, ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றனர். கண்களை கட்டிக்கொண்டே தடுமாற்றமின்றி, கேரம் விளையாடுகின்றனர். மொபைல் போன் இயக்குவது, சைக்கிள் ஓட்டுவது என பல விதங்களில் சபாஷ் பெறுகின்றனர்.பத்து நாட்கள்
சிறுவர்கள் வெறும் பத்து நாட்களில், காந்தாரி வித்தையை கற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. மனிதன் மனம் வைத்தால், எப்படிப்பட்ட கஷ்டமான கலையையும், எளிதில் கற்றுக்கொள்ளலாம் என்பதற்கு, இம்மூன்று சிறுவர்களே உதாரணமாக உள்ளனர்.கண்களை கட்டிக்கொண்டு, பொருட்களையும், நபர்களையும் எப்படி அடையாளம் காண்கிறீர்கள் என, யாராவது கேட்டால், மூன்றாவது கண்ணால் என பதிலளித்து, ஆச்சரியப்படுத்துகின்றனர். இது கடவுளின் அருள் என, பெற்றோர் நம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us