Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் எழுத்துக்களால் ஆன முதல் திருவள்ளுவர் சிலை! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ் எழுத்துக்களால் ஆன முதல் திருவள்ளுவர் சிலை! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ் எழுத்துக்களால் ஆன முதல் திருவள்ளுவர் சிலை! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ் எழுத்துக்களால் ஆன முதல் திருவள்ளுவர் சிலை! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

UPDATED : ஜன 07, 2024 12:00 AMADDED : ஜன 07, 2024 10:47 AM


Google News
கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், குறிச்சி குளத்தில், ரூ.52.16 கோடி செலவில், தமிழர் பாரம்பரியத்தை உணர்த்தும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.குளத்தின் கிழக்கு கரை பகுதியில், செல்பி பாயின்ட், பொங்கல் விழா, பரதநாட்டியம் ஆடும் பெண், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள், சிலம்பம் ஆடும் வீரர்கள் ஆகிய சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, சின்ன குறிச்சி குளத்தில் சில்வர் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. நாட்டிலேயே எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட முதல் திருவள்ளுவர் சிலை இதுவாகும்.இதில், உயிர்(12), மெய்(18), உயிர்மெய்(216) எழுத்துகள், ஆய்த எழுத்து(1) என, தமிழ் மொழியில் உள்ள, 247 எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம். இச்சிலையானது, 15 அடி அகலம், 25 அடி உயரம், 20 அடி நீளம் என, 2.2 டன் எடையுடன் நிறுவப்பட்டுள்ளது.சென்னை தலைமைசெயலகத்தில் நேற்று நடந்த விழாவில், குறிச்சி குளக்கரையில் அமைக்கப்பட்டுளள ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை, காணொலி வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.கலெக்டர் கிராந்திகுமார் பேடி, மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் திருவள்ளுவர் சிலைக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us