Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜாக்டோ ஜியோ பிப்., 26 முதல் காலவரையற்ற போராட்டம்

ஜாக்டோ ஜியோ பிப்., 26 முதல் காலவரையற்ற போராட்டம்

ஜாக்டோ ஜியோ பிப்., 26 முதல் காலவரையற்ற போராட்டம்

ஜாக்டோ ஜியோ பிப்., 26 முதல் காலவரையற்ற போராட்டம்

UPDATED : ஜன 10, 2024 12:00 AMADDED : ஜன 10, 2024 10:06 AM


Google News
Latest Tamil News
மதுரை: பிப்., 26 முதல் காலவரையற்ற போராட்டம் உட்பட பல்வேறு போராட்ட முடிவுகளை ஜாக்டோ ஜியோ அமைப்பு எடுத்துள்ளது. இதில் அரசியல் கலந்துள்ளதாக ஊழியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் பலவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றன.பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது, சரண்டர் ஒப்படைப்பு, உயர்கல்வி ஊக்க உதிய உயர்வு, சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட பலருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், காலியிடங்களை நிரப்புதல் என பல்வேறு கோரிக்கைகளில் ஒற்றுமையாக உள்ளதால் ஜாக்டோ ஜியோ என்ற அமைப்பை (ஜாயின்ட் ஆக்சன் கவுன்சில் ஆப் தமிழ்நாடு டீச்சர் அண்ட் கவர்ன்மென்ட் ஆர்க்கனைசேஷன்) உருவாக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பல சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன.இந்த அமைப்பினர் அவ்வப்போது கூட்டாக இணைந்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதை மிகவும் வலியுறுத்தி வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியிலும், தற்போதைய தி.மு.க., ஆட்சியிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.நேற்று முன்தினம் சென்னையில் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களின் உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. இதில் தமிழ்நாடு அரசிடம் 10 வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளனர்.பா.ஜ., அ.தி.மு.க.,வை தவிர்ப்பது ஏன்அதன்படி ஜன., 22 முதல் 24 வரை ஆசிரியர், அரசு ஊழியர் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்துவது. ஜன.,30 ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல், பிப்.,5 முதல் 9 வரை அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவது (பா.ஜ.,- அ.தி.மு.க., தவிர்த்து), பிப்.,10ல் மாவட்ட அளவில் வேலைநிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு, பிப்.,16 ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம், பிப்.,26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு எடுத்துள்ளனர்.இம்முடிவில் அரசியல் இருப்பதாக அரசு ஊழியர்கள் கருதுகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது என்ற முடிவில், பா.ஜ.,வையும், அ.தி.மு.க.,வையும் தவிர்ப்பதால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.கடந்த ஓராண்டுக்கு முன் இதேபோன்ற ஒருமுடிவை எடுத்த போது அனைத்து அரசியல் கட்சியினரையும் சந்தித்து ஆதரவு திரட்டினர். ஆனால் இப்போது பா.ஜ., அ.தி.மு.க.,வை தவிர்ப்பதால் ஆளும்தரப்பிற்கு எதிராக செயல்பட அமைப்பு தயக்கம் காட்டுகிறதோ என்ற கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. அனைத்து தரப்பினரிடமும் ஆதரவு திரட்ட வேண்டும் என அரசு ஊழியர்கள் கருதுகின்றனர்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us