UPDATED : ஜன 13, 2024 12:00 AM
ADDED : ஜன 13, 2024 10:23 AM

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி துறையில் வட்டார கல்வி அலுவலர் என்ற பி.இ.ஓ., பதவியில் 33 இடங்கள் காலியாக இருந்தன. இவற்றை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இந்த ஆண்டு ஜூலையில் தேர்வு நடந்தது. முடிவுகள், நவ., 9ல் வெளியாகின. தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிச.,14ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. பணிக்கு தேர்வானோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று https://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிட்டது.


