Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்!

தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்!

தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்!

தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்!

UPDATED : ஜன 16, 2024 12:00 AMADDED : ஜன 16, 2024 05:19 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்: பிறந்த தேதியை கூறினால், அது எந்த நாள் என்பதை சரியாக கூறும் சிறுவனால், திருப்பூர் மாவட்டத்துக்கே பெருமைகள் குவிந்து கொண்டுள்ளது. சிறுவயது முதல், இத்தகைய திறமையை வளர்த்துக்கொண்ட சாய் சர்வேஷ் என்ற சிறுவன், மூன்று சாதனை புத்தகங்களில் பங்குபெற்று, 12 வயதில் அபார சாதனை படைத்துள்ளார். திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சியை சேர்ந்தவர் சீனிவாசன் - வசுமதி. தம்பதியருக்கு சாய் சர்வேஷ், 12 என்ற மகன், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, துவாரகா சிறப்பு பள்ளியில், 6 ம் வகுப்பு பயின்று வருகிறார்.சிறு வயது முதல் மேற்கொண்ட பயிற்சியால், எத்தனை ஆண்டுகள் பின்னால் சென்று கேட்டாலும், தேதிக்குறிய நாளை சரியாக கூறும் வல்லமை பெற்றிருக்கிறார். இதனால், இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன், ஆசியா புக் ஆப் ரெக்கார்டு ஆகிய மூன்று சாதனைகளை படைத்துள்ளார். சமீபத்தில், ஆசியா புக் ஆப் ரெக்கார்டு சாதனை படைத்து, ஊர் திரும்பிய சிறுவன் சாய் சர்வேஷ், தனது பெற்றோருடன் சென்று, ஊராட்சி தலைவர் சண்முகசுந்தரத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோரும் பாராட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாது, பல்வேறு தன்னார்வ பொதுநல அமைப்பினரும், சிறுவனை பாராட்டி வருகின்றனர்.நாள், மாதம் மற்றும் ஆண்டு விவரத்தை கூறினால், அந்த கிழமையை உடனுக்குடன் கூறிவிடுவான். அதேபோல், ஆண்டு, மாதம், கிழமையை கூறினால், அந்த மாதத்தில், ஒரே கிழமையில் வரும் ஐந்து தேதிகளையும் கூறிவிடுவார். இதற்காக, ஒரே நேரத்தில் மூன்று சாதனைகளை புத்தகங்களிலும் இடம்பிடித்திருக்கிறார்.இந்திய சாதனை புத்தகம் மற்றும் ஆசிய சாதனை புத்தக சாதனைக்காக, 62 கேள்விகளுக்கு, 1 நிமிடம், 08 விநாடிகளில் பதில் அளித்துள்ளார். இதில், கி.பி., 1ம் ஆண்டில் இருந்து பல கோடி ஆண்டுகளுக்கும், நாட்களை கண்டறியும் திறமை பெற்றிருக்கிறோர்.அதேபோல், உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற, 100 சுதந்திர போராட்ட தியாகிகளின் பிறந்த தேதியில் இருந்து பெயரை கூறுவார்; கேள்விகளுக்கு, ஐந்து நிமிடம், 59 விநாடிகளில் பதில் அளித்து, சாதனை படைத்துள்ளார், என்றனர் பெற்றோர் பெருமிதம் பொங்க.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us