Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பசுமை முதன்மையாளர் விருது: விண்ணப்பம் வரவேற்பு

பசுமை முதன்மையாளர் விருது: விண்ணப்பம் வரவேற்பு

பசுமை முதன்மையாளர் விருது: விண்ணப்பம் வரவேற்பு


UPDATED : ஜன 17, 2024 12:00 AM

ADDED : ஜன 17, 2024 10:36 AM

Follow on Google

UPDATED : ஜன 17, 2024 12:00 AM ADDED : ஜன 17, 2024 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:
தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருதுக்கு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
தமிழ்நாடு மாசுக் காட்டுப்பாடு வாரியம், 2023-24ம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதுகளை, நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், குடியிருப்பு நலச்சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்பு, தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.ஒவ்வொர் ஆண்டும், 100 பேருக்கு வழங்கப்படுகிறது. இதில், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, விழிப்புணர்வு, புதுமையான பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில் நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள்.நிலையான வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் கடலோர பகுதி பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில், www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களை, செங்கல்பட்டு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.பசுமை முதன்மையாளர் விருது 2023க்கான முன்மொழிவை, கலெக்டரிடம் ஏப்., 15ம் தேதிக்குள் நேரில் சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap