Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் நியமன ஊழல்; கோல்கட்டாவில் ரெய்டு

ஆசிரியர் நியமன ஊழல்; கோல்கட்டாவில் ரெய்டு

ஆசிரியர் நியமன ஊழல்; கோல்கட்டாவில் ரெய்டு

ஆசிரியர் நியமன ஊழல்; கோல்கட்டாவில் ரெய்டு

UPDATED : ஜன 20, 2024 12:00 AMADDED : ஜன 20, 2024 10:46 AM


Google News
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த வழக்கில் ஏற்கனவே மேற்கு வங்க கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில், இந்த ஊழல் வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் விபரங்கள் அமலாக்கத்துறைக்கு தெரிந்தன.இதையடுத்து நேற்று முன்தினம் கோல்கட்டாவில் உள்ள இடைத்தரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.சோதனை குறித்து அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆசிரியர் நியமன ஊழலில் இடைத்தரர்களாக செயல்பட்டவர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது. இவர்களில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமானவர்கள்.லஞ்ச பணத்தை சேகரித்து, பல்வேறு முகவரிகளுக்கு இந்த இடைத்தரகர்கள் வினியோகித்துஉள்ளனர். அதில் ஒருவர் மாநிலம் முழுவதும் 400 இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். அதற்கான ஆதாரங்களை திரட்டிஉள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us