Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/9 உறுதிமொழிகளை எடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

9 உறுதிமொழிகளை எடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

9 உறுதிமொழிகளை எடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

9 உறுதிமொழிகளை எடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

UPDATED : ஜன 22, 2024 12:00 AMADDED : ஜன 22, 2024 10:11 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: உள்நாட்டு சுற்றுலாவை பிரபலப்படுத்த மக்கள் முன் வர வேண்டும், நீரை சேமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 உறுதிமொழிகளை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.குஜராத் மாநிலம் கோடல்தம் அறக்கட்டளை புற்றுநோய் மருத்துவனையின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசும் போது, நாட்டு மக்கள் 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்.அவை பின் வருமாறு:1. முதலில் தாய்நாட்டை பற்றி யோசியுங்கள். உங்களால் முடிந்ததை நாட்டிற்காக செய்யுங்கள். சுற்றுலா செல்ல திட்டமிட்டால், உள்நாட்டு சுற்றுலா தலங்களை பற்றி யோசித்து அங்கு செல்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்க உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.2. ஒவ்வொரு சொட்டு நீரையும் மக்கள் சேமிக்க வேண்டும். நீர் சேமிப்பு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.3. ஒவ்வொரு கிராமமாக சென்று, டிஜிட்டல் பரிமாற்றம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.4. நாட்டு மக்கள், தங்களது இருப்பிடங்கள், கிராமங்கள் மற்றும் நகரங்களை தூய்மை நகரங்களில் முதன்மையானதாக மாற்ற வேண்டும்.5. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பிரபலப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு இயற்கை விவசாய முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.6. நாட்டு மக்கள் தங்களது தினசரி உணவில் தினைப்பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.7. விளையாட்டை தினசரி வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும்8. எந்தவித போதைப்பொருட்களுக்கும் அடிமையாக வேண்டாம்9. இந்தியர்கள் தங்களது திருமணங்களை உள்நாட்டிலேயே நடத்த வேண்டும். வெளிநாட்டில் திருமணம் நடத்துவது அவசியமா? அந்நிகழ்வுகளை உள்நாட்டில் நடத்த முடியாதா? திருமணம் நடக்கும் இடங்களில் உள்ளவர்களுக்கு தான் நமது பணம் செல்லும். இதனை தடுக்க, வெளிநாட்டில் திருமணம் நடக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us