Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.நா.வின் செயல் அபத்தமானது; இந்தியாவுக்கு எலன் மஸ்க் ஆதரவு

ஐ.நா.வின் செயல் அபத்தமானது; இந்தியாவுக்கு எலன் மஸ்க் ஆதரவு

ஐ.நா.வின் செயல் அபத்தமானது; இந்தியாவுக்கு எலன் மஸ்க் ஆதரவு


UPDATED : ஜன 25, 2024 12:00 AM

ADDED : ஜன 25, 2024 09:46 AM

Follow on Google

UPDATED : ஜன 25, 2024 12:00 AM ADDED : ஜன 25, 2024 09:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நியூயார்க்:
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. நிரந்தர உறுப்பினருக்கு மட்டுமே எந்தவொரு உறுதியான தீர்மானத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைப்பு செய்யக்கோரி இந்தியா பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்த 21ம் நுாற்றாண்டின் புவி அரசியல் யதார்த்தங்களை ஐ.நா., பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என, தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், ஐ.நா., பொது செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் தன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.அதில் அவர் கூறியிருந்ததாவது:
பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்ரிக்காவுக்கு இன்னும் நிரந்தர உறுப்பினர் இருக்கை இல்லாததை எப்படி ஏற்க முடியும்? ஐ.நா., போன்ற அமைப்புகள் இன்றைய உலகை பிரதிபலிக்க வேண்டுமே தவிர, 80 ஆண்டுகளுக்கு முந்தைய உலகத்தை அல்ல.செப்டம்பரில் நடக்கவுள்ள எதிர்கால உச்சி மாநாடு, உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்களை பரிசீலிக்க மற்றும் நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதற்கான வாய்ப்பாக இருக்கும். இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.இதற்கு, அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலன் மஸ்க் எதிர்வினையாற்றி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
ஐ.நா.,வின் தற்போதைய அமைப்பு உலகின் அதிக மக்கள் தொகை உடைய நாடுகளை போதுமான அளவில் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. எனவே, ஐ.நா., அமைப்புகளில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம்.பிரச்னை என்னவென்றால், அதிகப்படியான அதிகாரம் உள்ளவர்கள் அதை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. உலகின் அதிக மக்கள் தொகை உடைய நாடான இந்தியாவுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இருக்கை வழங்கப்படாதது அபத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap