Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓசூர் மாணவி பாடிய ராமர் பக்தி பாடல் புதுச்சேரி கவர்னர் வெளியிட்டு பாராட்டு

ஓசூர் மாணவி பாடிய ராமர் பக்தி பாடல் புதுச்சேரி கவர்னர் வெளியிட்டு பாராட்டு

ஓசூர் மாணவி பாடிய ராமர் பக்தி பாடல் புதுச்சேரி கவர்னர் வெளியிட்டு பாராட்டு


UPDATED : ஜன 25, 2024 12:00 AM

ADDED : ஜன 25, 2024 09:49 AM

Follow on Google

UPDATED : ஜன 25, 2024 12:00 AM ADDED : ஜன 25, 2024 09:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்:
ஓசூர் மாணவி பாடிய ராமர் பக்தி பாடலை, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு, மாணவியை பாராட்டினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உழவர் சந்தை பின்புறமுள்ள நியூ டெம்பிள் ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் சிவராமன், 60; இவர் மனைவி ஜெயப்பிரியா, 45; இவர்களது மகள் மகன்யாஸ்ரீ, 17; ஓசூர் அசோக் லேலண்ட் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இசையில் அதிக ஆர்வம் கொண்ட இவர், ஓசூரில் நடந்த இசை நிகழ்ச்சியில், பின்னணி பாடகரான மறைந்த எஸ்.பி.பி.,யுடன் இணைந்து பாடியுள்ளார். ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் அடங்கிய விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளார். மேலும், கோவில்களில் பக்தி பாடல்கள் மற்றும் கர்நாடக சங்கீத பாடல்களை பாடியுள்ளார்.இந்நிலையில், அயோத்தியில் நேற்று முன்தினம் ராமர் சிலை பிரதிஷ்டை நடந்த நிலையில், ராமர் மீதான அதீத பக்தியால், வீடியோவுடன் கூடிய பக்தி பாடல் ஒன்றை, மாணவி மகன்யாஸ்ரீ பாடியுள்ளார். அந்த ஆல்பத்தை புதுச்சேரி கவர்னர் மாளிகையில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் வெளியிட்டதோடு, பார்த்து ரசித்தார். பின், மாணவி மகன்யாஸ்ரீக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். அப்போது, புதுச்சேரி தலைமை செயலர் ராஜூவ்வர்மா மற்றும் மாணவியின் பெற்றோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap