Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காஞ்சிபுரத்தில் வரும் 28 வரை இயந்திர பறவைகள் கண்காட்சி

காஞ்சிபுரத்தில் வரும் 28 வரை இயந்திர பறவைகள் கண்காட்சி

காஞ்சிபுரத்தில் வரும் 28 வரை இயந்திர பறவைகள் கண்காட்சி

காஞ்சிபுரத்தில் வரும் 28 வரை இயந்திர பறவைகள் கண்காட்சி

UPDATED : ஜன 26, 2024 12:00 AMADDED : ஜன 26, 2024 12:01 PM


Google News
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமராஜர்வீதியில், சித்தீஸ்வரர் மஹால் எனப்படும் பழைய கே.பி.கே.ரத்னா பாய் திருமண மண்டபத்தில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பொருட்காட்சி நடந்து வருகிறது.இதில், இயந்திர பறவைகளின் சரணாலயம், பேய் வீடு, பன் சிட்டி 4 டி ஷோ மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், பேன்ஸி பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் இடம் பெறுகிறது.இதுகுறித்து பொருட்காட்சி ஒருங்கிணைப்பாளர் சவுந்தரபாண்டியன் கூறியதாவது:கடந்த டிச., 25 முதல், காஞ்சிபுரத்தில் பொருட்காட்சி நடக்கிறது. மாலை 5:00 மணி முதல், இரவு 9:30 மணி வரை நடக்கும் இப்பொருட்காட்சி வரும் 28ல் நிறைவு பெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us