இளநிலை உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு
இளநிலை உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு
இளநிலை உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு
UPDATED : ஜன 26, 2024 12:00 AM
ADDED : ஜன 26, 2024 12:07 PM
சென்னை: கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு பண்டக சாலைகள், நகர கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றில் காலியாக உள்ள, 2,500 இளநிலை உதவியாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய, கடந்த டிச., 24ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. தேர்வை, கூட்டுறவு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் நடத்தின.எழுத்து தேர்வில், 42,000 பேர் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் விபரங்கள் நேற்று, மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


