தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடர் அங்கீகாரம் கோரி 29ல் தனியார் பள்ளிகள் ஆர்ப்பாட்டம்

தொடர் அங்கீகாரம் கோரி 29ல் தனியார் பள்ளிகள் ஆர்ப்பாட்டம்

தொடர் அங்கீகாரம் கோரி 29ல் தனியார் பள்ளிகள் ஆர்ப்பாட்டம்


UPDATED : பிப் 06, 2024 12:00 AM

ADDED : பிப் 06, 2024 06:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 06, 2024 12:00 AM ADDED : பிப் 06, 2024 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அனைத்து சுயநிதி பள்ளிகளுக்கும், தொடர் அங்கீகாரம் வழங்கக்கோரி, வரும் 29ம் தேதி, டி.பி.ஐ., வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்&' என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம் அறிவித்து உள்ளது.சங்கத்தின் மாநில பொது செயலர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கை:
கடந்த, 2022 - 23 மற்றும் 2023 - 24ம் கல்வி ஆண்டில், கல்வி உரிமை சட்டத்தில், அரசின் சார்பில் தனியார் பள்ளி களில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான, கல்வி கட்டண பாக்கியை, தாமதமின்றி வழங்க வேண்டும்.அனைத்து சுயநிதி பள்ளிகளுக்கும், தற்காலிக தொடர் அங்கீகாரத்தை தாமதமின்றி, நிபந்தனையும், நிர்ப்பந்தமும் இன்றி வழங்க வேண்டும். அங்கீகாரம் பெற்று, 10 ஆண்டுகளான பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் பள்ளிக் கல்வி தலைமை அலுவலகம் உள்ள, டி.பி. ஐ., வளாகத்தில், வரும் 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us