தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.எஸ்.ஐ.ஆர்., எஸ்.இ.ஆர்.சி.,ல் அறிவியல் தினம் கொண்டாட்டம்

சி.எஸ்.ஐ.ஆர்., எஸ்.இ.ஆர்.சி.,ல் அறிவியல் தினம் கொண்டாட்டம்

சி.எஸ்.ஐ.ஆர்., எஸ்.இ.ஆர்.சி.,ல் அறிவியல் தினம் கொண்டாட்டம்


UPDATED : மார் 01, 2024 12:00 AM

ADDED : மார் 01, 2024 08:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 01, 2024 12:00 AM ADDED : மார் 01, 2024 08:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தேசிய அறிவியல் தினம், சென்னை, தரமணி, சி.எஸ்.ஐ.ஆர்.,  எஸ்.இ.ஆர்.சி., எனப்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில்நடந்தது.இதை முன்னிட்டு, அந்த மையத்தின் முன்னள் இயக்குனர் என். லட்சுமணன் நினைவு, விநாடி - வினா போட்டி நடந்தது. அதில், சென்னை மாநகராட்சியின், 21 பள்ளிகளை சேர்ந்த, 63 மாணவர்கள் பங்றே்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்படுகின்றன.இதைதொடர்ந்து, ஆராய்ச்சி மையத்தில் உள்ள நிலநடுக்கத்தை தாங்க கூடிய வகையில் கட்டப்படும் கட்டட ஆய்வு கூடம் உள்ளிட்டவை மாணவர்களுக்கு காட்டப்பட்டன.நிகழ்ச்சியில், எஸ்.இ.ஆர்.சி., மைய இயக்குனர் என்.ஆனந்தவள்ளி பேசியதாவது:
இந்தியாவில், அறிவியல் துறையில் சாதித்த பல அறிஞர்கள் உள்ளனர்; அவர்களை போல் மாணவர்களும் உருவாக வேண்டும்; மாணவர்கள், ஆக்கப்பூர்வாகவும், புதுமையாகவும், பெரிய கனவுகளுடன் திட்டவட்டமான இலக்குகளை நிர்ணயித்து கொள்ள வேண்டும். அதனுடன் கடினமாக உழைத்து, விடாமுயற்சியுடன் செயல்படுவதன் வாயிலாக வெற்றியை அடைய முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us