UPDATED : மார் 01, 2024 12:00 AM
ADDED : மார் 01, 2024 09:40 AM
கடற்புற்கள் என்பது கடலுக்கு அடியில் வாழும் ஒரு தாவரம். இதில் பல்வேறு இனங்கள் உள்ளன. சில கடல்வாழ் உயிரினங்களுக்கு கடற்புற்கள் முக்கிய உணவாக உள்ளது. 1930களில் இருந்து கடல்புற்களின் பரப்பு குறைந்து வருகிறது. இவை குறைந்தால் கடல் வளம், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பாக அமையும். இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 1ல் உலக கடற்புற்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடல் தண்ணீரை சுத்தப்படுத்துதல், மாசுக்களை கவர்தல் போன்றவை கடல்புற்களின் பணி. கடலில் ஏற்படும் கார்பனில் 18 சதவீதத்தை இவை உறிஞ்சி விடுகின்றன.


