Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாசிப்பு திறனை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை

வாசிப்பு திறனை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை

வாசிப்பு திறனை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை


UPDATED : மார் 07, 2024 12:00 AM

ADDED : மார் 07, 2024 09:49 AM

Follow on Google

UPDATED : மார் 07, 2024 12:00 AM ADDED : மார் 07, 2024 09:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:
வாசிப்பு திறனை மேம்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தமிழக சட்டசபை நுாலக குழு தலைவர் சுதர்சனம் கூறினார்.தர்மபுரி மாவட்ட மைய நுாலகம் மற்றும் இலக்கியம்பட்டி, ஏலகிரியில் நுாலகங்களை, தமிழக சட்டசபை நுாலக குழு தலைவர் சுதர்சனம் ஆய்வு செய்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாசிப்புத்திறனை மேம்படுத்த அறிவு சார் மையங்களை திறந்து வருகிறது. நகர் பகுதிகளின் பல்வேறு பகுதிகளில் புத்தக கண்காட்சிகளையும் நடத்தி வருகிறது. போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து, தமிழக அரசு செய்து வருகிறது.இந்நிலையில், தர்மபுரி மாவட்ட மைய நுாலகத்துக்கு தேவையான சேர், மேஜை உள்ளிட்டவைகள், 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் வழங்க உள்ளார். இந்த நுாலகத்தில், கூடுதல் அறைகள் கட்டப்பட்டு வருகிறது.அது விரைவில் முடிக்கப்பட்டு, நுாலக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். நுாலகத்தை ஆய்வு செய்தபோது, வைபை, தங்கும் அறை உள்ளிட்ட கோரிக்கைகளை அங்கு வந்து படிப்போர் கொடுத்துள்ளனர். இதை உடனடியாக செய்து தர நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.இதில், தமிழக சட்டசபை நுாலக குழு உறுப்பினர்கள் கணபதி, சம்பத்குமார், தர்மபுரி, பா.ம.க., எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap