Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவருக்கு கைவிலங்கிட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்

மாணவருக்கு கைவிலங்கிட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்

மாணவருக்கு கைவிலங்கிட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்


UPDATED : மார் 14, 2024 12:00 AM

ADDED : மார் 14, 2024 05:52 PM

Follow on Google

UPDATED : மார் 14, 2024 12:00 AM ADDED : மார் 14, 2024 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அருண்குமார், 24; அம்பேத்கர் அரசு கலைக் கல்லுாரியில் 2ம் ஆண்டு மாணவர். பகுதி நேரமாக, ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 11ம் தேதி, சென்னை கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து, அகரம் செல்லும் பயணியை, தன் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வந்தார்.பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, காந்தி சிலை எதிரே, முன்னால் சென்ற ஆட்டோ திடீரென பிரேக் பிடித்து நிறுத்தியதால், அருண்குமார் ஓட்டிச்சென்ற ஆட்டோ, அதன் மீது மோதியது. இதில், அருண்குமார் ஆட்டோவின் இடது பக்க கண்ணாடி உடைந்ததால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, அங்கு போலீஸ் சீருடை அணியாமல் வந்த செம்பியம் காவல் நிலைய தலைமை காவலரான அண்ணாமலை, முறையாக விசாரிக்காமல் அருண்குமாரை கன்னத்திலேயே அறைந்தார்.மேலும், மாணவரான அருண்குமார் கையில் விலங்கிட்டு, போலீஸ் வாகனத்தை வரவழைத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.இதுகுறித்து தகவலறிந்த அருண்குமாரின் நண்பர்கள், உதவி கமிஷனரிடம் புகார் அளித்தனர். அவர் உரிய விசாரணை நடத்தி, தலைமை காவலர் அண்ணாமலையை பணியிடை நீக்கம் செய்து, வடக்கு மண்டல காத்திருப்போர் பட்டியலுக்கு, நேற்று மாற்றப்பட்டார்.முன்னதாக, 2010ல் எழும்பூரில் நுண்ணறிவு போலீசை தாக்கிய புகாரில், அண்ணாமலை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்ததது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap