Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்கல்வி ஆலோசனை தரும் தினமலர் வழிகாட்டி

உயர்கல்வி ஆலோசனை தரும் தினமலர் வழிகாட்டி

உயர்கல்வி ஆலோசனை தரும் தினமலர் வழிகாட்டி


UPDATED : மார் 19, 2024 12:00 AM

ADDED : மார் 19, 2024 09:49 AM

Follow on Google

UPDATED : மார் 19, 2024 12:00 AM ADDED : மார் 19, 2024 09:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, உயர்கல்வியில் சேர்வதற்கான ஆலோசனை வழங்க தினமலர் சார்பில், ஆண்டு தோறும் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, தினமலர் மற்றும் கோயம்புத்துார் ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் நிறுவனம் இணைந்து, வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகின்றன.கல்வியாளர்கள் பங்கேற்பு
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், வரும், 23, 24 மற்றும், 25ம் தேதிகளில், காலை, 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கும். இதில், 20க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் பங்கேற்று, ஆலோசனை வழங்க உள்ளனர்.ஸ்பேஸ் சயின்ஸ் குறித்து, இஸ்ரோ இயக்குனர் ராஜராஜன்; 21ம் நுாற்றாண்டு திறன்கள் குறித்து, சுஜித்குமார்; எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்து செந்தில் ராஜா; வேலைவாய்ப்பு தரும் படிப்புகள் குறித்து, ரமேஷ் பிரபா ஆகியோர் விளக்கம் தருகின்றனர்.நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் சாதித்து உயர்கல்வியை எட்டுவது குறித்து, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் ஆலோசனை தர உள்ளார்.ஐ.ஐ.டி.,
நீங்களும் சாதனையாளர் ஆகலாம் என்ற தலைப்பில், இப்போபே நிறுவனர் மோகன்; வேலைவாய்ப்பு திறன்கள் குறித்து, ஜோஹோ நிறுவன மனிதவள பிரிவு தலைவர் சார்லஸ் காட்வின்; நீங்களும் விஞ்ஞானி ஆகலாம் என்ற தலைப்பில், இந்திய பாதுகாப்புத்துறையின் விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு மற்றும் கரியர் கவுன்சிலிங் குறித்து, கல்வி ஆலோசகர் அஷ்வின் பேச உள்ளனர்.டேட்டா அனலிடிக்ஸ் குறித்து, ஆஸ்பயர் சாமிநாதன், வருங்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பம் குறித்து, கோப்ரூகல் நிறுவனத்தின் நிறுவனர் குமார் வேம்பு, அனைவருக்கும் ஐ.ஐ.டி., என்ற தலைப்பில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேசஉள்ளனர்.பதிவு செய்யும் வசதி
கருத்தரங்கில் மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, சிறந்த பதில் அளிப்பவர்களுக்கு, லேப்டாப், டேப் மற்றும் வாட்ச் பரிசாக வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம் ஆகும். மேலும், www.kalvimalar.com என்ற இணையதளத்திலும், 91505 74441 என்ற மொபைல்போன் எண்ணில், வாட்ஸாப்பில் பதிவு செய்யவும்.பவர்டுபை
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் ஆகியன, பவர்டுபை நிறுவனங்களாக செயல்படும்.ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பிரின்ஸ் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மற்றும் ஷிவ் நாடார் பல்கலை ஆகிய நிறுவனங்கள், இணைந்து வழங்குகின்றன.80க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
இந்நிகழ்ச்சியில், 80க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம் பெறும். அங்கு, கல்வி நிறுவன பிரதிநிதிகள், மாணவர் சேர்க்கை குறித்த விபரங்களை வழங்குவர். குகா என்ற ஜெர்மன் நிறுவனத்தின் ரோபோ, ட்ரோன், செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ., சார்ந்த, சிறப்பு கண்காட்சி, இடம் பெற உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap