Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலையில் குருஷேத்ரா 25 தொழில்நுட்ப நிகழ்வு: 3 நாட்கள் நடைபெறுகிறது

அண்ணா பல்கலையில் குருஷேத்ரா 25 தொழில்நுட்ப நிகழ்வு: 3 நாட்கள் நடைபெறுகிறது

அண்ணா பல்கலையில் குருஷேத்ரா 25 தொழில்நுட்ப நிகழ்வு: 3 நாட்கள் நடைபெறுகிறது

அண்ணா பல்கலையில் குருஷேத்ரா 25 தொழில்நுட்ப நிகழ்வு: 3 நாட்கள் நடைபெறுகிறது

UPDATED : பிப் 10, 2025 12:00 AMADDED : பிப் 10, 2025 09:13 AM


Google News
Latest Tamil News
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் சிஇஜி டெக் போரம் நடத்தும் குருக்க்ஷேத்ரா எனும் தொழில்நுட்ப மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

சி.டி.எப் எனப்படும் சிஇஜி டெக்போரம் 2006ம் ஆண்டு முதல் மாணவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, குறுகிய காலத்திற்கான செயல்பாட்டு திட்டங்களாக ஆம்புலன்ஸ் கண்காணிப்பு, AR வளாக அனுபவம், பசுமை கண்டிஷனர், ஹைட்ராலிக் வாகனம், ஹைபிரிட் 3டி பிரிண்டர், லேசர் கால்வனோமீட்டர், ஒமேகா வாட்ச் மற்றும் டைலொப்டிக் ஐ போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், நீண்டகால திட்டங்களாக 3டி கான்கிரீட் பிரிண்டர் மற்றும் சோலானிக்ஸ் ஐசி தீவிரமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சி சார்ந்த புதிய முயற்சிகளாக செயற்கை நேர இயந்திரம், கார்பன் அளவீடு, மின்சார உந்துவிசை, பனிப்பாறை இயக்கம், மல்டி-ஃபேக்டர் பகுப்பாய்வைப் பயன்படுத்தி நிலத்தடி நீர் மேப்பிங், செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி துல்லியமான விவசாயம் போன்ற திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.நடைமுறை தீர்வுகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை மையமாகக் கொண்டு, சி.டி.எஃப். ஒவ்வொரு ஆண்டும் புதிய முனைப்புடன் தொழில்நுட்ப மாற்றங்களை நோக்கி பயணிக்கிறது. மாணவர்கள் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் பங்களிப்புகளைச் செய்ய ஊக்கமளித்து, புதுமை, தொழில்நுட்பம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ளது.தொழில்நுட்ப திட்டங்களை மேற்கொள்வதுமட்டுமல்லாமல், சி.டி.எப் மாணவர் சமூகத்திற்காக கேஹாக்ஸ், வியூஹ, மற்றும் குருக்க்ஷேத்ரா ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 21 முதல் பிப்ரவரி 23 வரை, பாதம்ஸ் ஒப் ப்யூச்சர் என்ற தலைப்பில், கடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு, குருக்க்ஷேத்ரா 25 என்ற தொழில்நுட்ப நிகழ்வை நடத்துகிறது. . மேலும் தகவலுக்கு மற்றும் பங்கேற்புக்கு: www.kurukshetraceg.org.in இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us