கணித கணினி ஆய்வகம் அரசு கல்லுாரியில் திறப்பு

UPDATED : ஏப் 02, 2025 12:00 AM
ADDED : ஏப் 02, 2025 09:00 AM

கோவை: கோவை அரசு கலைக் கல்லுாரியில், கணிதவியல் துறை சார்பில், கணித கணினி ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
கணிதவியல் துறையில் பயிலும், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கணினி பயிற்சி அவசியம் தேவைப்படுகிறது. அதன் அடிப்படையில் முதல்வரின் அனுமதி பெற்று, முன்னாள், இந்நாள் பேராசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் மாணவர்களின் உதவி பெற்று, இந்த ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
கணித கணினி ஆய்வகத்தை, கல்லுாரி முதல்வர் எழிலி திறந்து வைத்தார். துறைத்தலைவர் ஜெயந்தி, முன்னாள் பேராசிரியர் சோலை மலைச்சாமி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.