Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ விவேகானந்தர் மண்டப பார்வையாளர் புத்தகத்தில் மோடி குறிப்பு

விவேகானந்தர் மண்டப பார்வையாளர் புத்தகத்தில் மோடி குறிப்பு

விவேகானந்தர் மண்டப பார்வையாளர் புத்தகத்தில் மோடி குறிப்பு

விவேகானந்தர் மண்டப பார்வையாளர் புத்தகத்தில் மோடி குறிப்பு

UPDATED : ஜூன் 03, 2024 12:00 AMADDED : ஜூன் 03, 2024 10:14 PM


Google News
நாகர்கோவில்:
என் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்பேன் என்று விவேகானந்தர் மண்டப பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் மூன்று நாள் தியானம் மேற்கொண்ட அவர் நேற்று பார்வையாளர் புத்தகத்தில் எழுதியதாவது:
இந்தியாவின் கடைசி முனையான கன்னியாகுமரியில் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமான உணர்வை அனுபவித்து வருகிறேன். பார்வதியும், சுவாமி விவேகானந்தரும் இந்த பாறையில் தியானம் செய்திருந்தனர். ஏக்நாத் ரானடே இந்த கல் நினைவகத்தை அமைத்து விவேகானந்தரின் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்தார்.
ஆன்மிக வளர்ச்சியின் முன்னோடியான சுவாமி விவேகானந்தர் எனது லட்சியமாகவும், எனது ஆற்றலின் மூலமாகவும், எனது ஆன்மிக பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். பல வருடங்கள் கிழக்கு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சுவாமி விவேகானந்தர் இந்த இடத்துக்கு வந்து தவம் செய்த போது இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு ஒரு புதிய திசையை மட்டும் பெறவில்லை. இன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் கனவுகள், மதிப்புகள் மற்றும் லட்சியங்களை பின்பற்றி வடிவம் பெறுவது எனது அதிர்ஷ்டம்.
அதனால் எனக்கும் இந்த புனித இடத்தில் தியானம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பாறை நினைவு சின்னத்தில் நான் இருக்கும் இந்த நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும். எனது வாழ்வின் ஒவ்வொரு கணமும் என் உடலில் ஒவ்வொரு துகளும் தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்படும் என்ற எனது உறுதியை பாரத அன்னையின் காலடியில் அமர்ந்து இன்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாரதத்திற்காகவும் நமது மரியாதையை செலுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us