Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளநிலை 'நீட்' தேர்வு பாடத்திட்டம் வெளியீடு

இளநிலை 'நீட்' தேர்வு பாடத்திட்டம் வெளியீடு

இளநிலை 'நீட்' தேர்வு பாடத்திட்டம் வெளியீடு


UPDATED : டிச 26, 2025 11:21 AM

ADDED : டிச 26, 2025 11:22 AM

Follow on Google

UPDATED : டிச 26, 2025 11:21 AM ADDED : டிச 26, 2025 11:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
இளநிலை 'நீட்' தேர்வுக்கான பாடத்திட்ட விபரங்களை, தேசிய மருத்துவ ஆணையமான, என்.எம்.சி., வெளியிட்டுள்ளது.

நாடு முழுதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளின், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகள்; சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வு வாயிலாக, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அதேபோல், ராணுவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு, 'நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 'நீட்' தேர்வை தேசிய தேர்வுகள் முகமை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, 2026 -27ம் கல்வியாண்டுக்கான 'நீட்' தேர்வு, அடுத்த ஆண்டு நாடு முழுதும் நடக்க உள்ளது. அதில், 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும், தலா, 4 மதிப்பெண்கள் வீதம், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கும்.

இளநிலை 'நீட்' தேர்வுக்கான பாடத்திட்டங்கள், https://www.nmc.org.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய, உயிரியல் பாடத்தில் இருந்து, 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா, 180 மதிப்பெண்களுக்கும், கேள்விகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap