Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மொழிகள் தொடர்பாக தேவையற்ற அரசியல் வேண்டாம்

மொழிகள் தொடர்பாக தேவையற்ற அரசியல் வேண்டாம்

மொழிகள் தொடர்பாக தேவையற்ற அரசியல் வேண்டாம்

மொழிகள் தொடர்பாக தேவையற்ற அரசியல் வேண்டாம்

UPDATED : மார் 18, 2025 12:00 AMADDED : மார் 18, 2025 11:58 PM


Google News
அமராவதி : மொழிகள் தொடர்பாக தேவையற்ற அரசியலில் ஈடுபட வேண்டாம். தாய்மொழி வழியாக கல்வி கற்றவர்களே உலகில் சிறந்து விளங்குகின்றனர். என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசு ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், பா.ஜ., கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ஆந்திர சட்டசபையில் கூறியதாவது:

ஆங்கிலம் மட்டுமே அறிவுக்கு உத்தரவாதமான மொழி என்ற தவறான கருத்து பொதுவாக நிலவு கிறது. மொழி என்பது தொடர்பு கொள்வதற்கு மட்டுமே; மொழியால் அறிவு வளராது.

எந்த மொழியும் வெறுப்புக்குரியது அல்ல . இங்கு ஆந்திராவை பொறுத்தவரை தாய்மொழி தெலுங்கு; ஹிந்தி தேசிய மொழி; ஆங்கிலம் சர்வதேச மொழி. தாய் மொழியில் கல்வி கற்பது எளிது. தாய்மொழி வாயிலாக கல்வி கற்பவர்கள் மட்டுமே உலகில் சிறந்து விளங்குகின்றனர்.

நம் வாழ்க்கையில் எத்தனை மொழியை கற்க முடியுமோ, அத்தனை மொழிகளை கற்கலாம். தேசிய மொழியை கற்றால், டில்லியில் தடையின்றி உரையாடலாம். . எனவே, மொழிகள் தொடர்பாக தேவையற்ற அரசியலில் யாரும் ஈடுபட வேண்டாம். அனைவருமே, முடிந்த வரை பல மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us