Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜிப்மரில் நர்சிங் பட்டமளிப்பு விழா

ஜிப்மரில் நர்சிங் பட்டமளிப்பு விழா

ஜிப்மரில் நர்சிங் பட்டமளிப்பு விழா


UPDATED : மே 15, 2026 04:26 PM

ADDED : மே 15, 2026 04:28 PM

Follow on Google

UPDATED : மே 15, 2026 04:26 PM ADDED : மே 15, 2026 04:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
ஜிப்மரில் நர்சிங் மற்றும் துணை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான 12வது பட்டமளிப்பு விழா நடந்தது.

ஜிப்மரில் நர்சிங் மற்றும் துணை மருத்துவ அறிவியல் படிப்புகளான எம்.எஸ்.சி., நர்சிங், எம்.எஸ்.சி., (ஏ.எச்.எஸ்.,), எம்.பி.எச்., பி.எஸ்.சி., நர்சிங் மற்றும் பி.எஸ்.சி., (ஏ.எச்.எஸ்.,) ஆகியவற்றுக்கான 12வது பட்டமளிப்பு விழா, நேற்று காலை ஜிப்மர் அப்துல் கலாம் அரங்கத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலரான புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தலைமை தாங்கினார். புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளரர் சரத் சவுகான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி, மருத்துவக் கல்வி, நோயாளி சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார். பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 320 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டது. துறைசார்ந்த பாடங்களில் சிறந்து விளங்கி மற்றும் அதிக மதிப்பெண்களைப் பெற்ற 24 மாணவர்களுக்குப் தங்கப் பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜிப்மர் நிர்வாகம் செய்திருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap