விடுமுறையிலும் 3 நாட்கள் பள்ளி வர மாணவர்களுக்கு உத்தரவு மதுரையில் அக்னி சோதனை

UPDATED : ஏப் 08, 2024 12:00 AM
ADDED : ஏப் 08, 2024 09:38 AM

மதுரை:
மதுரை தேர்தலுக்காக கல்வித்துறையில் ஆண்டுத் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டு ஏப்., 6 முதல் 21 வரை முதற்கட்ட கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் மூன்று நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் காரணமாக 9ம் வகுப்பு வரை ஆண்டு தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டு ஏப்.,22 ல் அறிவியல், ஏப்.,23ல் சமூக அறிவியல் (மதுரையில் ஏப்.,24) தேர்வு நடக்கும் என மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி தேர்வு அட்டவணைப்படி ஏப்., 6 முதல் 21 வரை மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வரவேண்டும். ஆனால் மதுரையில் ஏப்.,8, 10, 12ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சி.இ.ஓ., கார்த்திகா கூறுகையில், அந்த மூன்று நாட்களில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு சீருடைக்கான அளவு எடுப்பது மற்றும் கல்வித் உதவித் தொகை, ஆதார் பதிவு பணிக்காக வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆசிரியர்கள், பெற்றோர் கூறியதாவது: வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் மாணவர்களை 3 நாட்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்பது தேவையில்லாதது. 5, 8ம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாறிச்செல்லும் வாய்ப்புகள் உள்ளன. 9ம் வகுப்புக்கு சீருடை இல்லை. ஆனால் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு (அடுத்தாண்டு 9ம் வகுப்புக்கு சென்றுவிடுவர்) ஏன் சீருடை அளவு எடுக்க வேண்டும். வெயில் காலம் மாணவர்களை அலைக்கழிப்பதை தவிர்க்க வேண்டும் என்றனர்.