/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவக்கம்

UPDATED : பிப் 08, 2025 12:00 AMADDED : பிப் 08, 2025 10:16 AM


Google News
Latest Tamil News
கிருஷ்ணகிரி:
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள, 169 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் 15,794 மாணவர்களுக்கு நேற்று செய்முறை தேர்வு தொடங்கியது.

இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், கணக்கியல், கணக்கு தணிக்கையியல் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கி, வரும், 14 வரை நடக்கிறது.இதைதொடர்ந்து வரும், 15 முதல் 21 வரை பிளஸ் 1 மாணவ, மாணவி களுக்கான செய்முறை தேர்வு நடக்கிறது.

மாவட்டத்தில் பிளஸ் 1 பயிலும், 16,971 மாணவர்கள் கலந்து கொள்வர். கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று பிளஸ் 2 மாணவியருக்கு நடந்த செய்-முறை தேர்வை, மாவட்ட சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.