Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமூக வளர்ச்சியில் பிம்ஸ்டெக்கின் பங்கு அளப்பரியது: பிரதமர் மோடி

சமூக வளர்ச்சியில் பிம்ஸ்டெக்கின் பங்கு அளப்பரியது: பிரதமர் மோடி

சமூக வளர்ச்சியில் பிம்ஸ்டெக்கின் பங்கு அளப்பரியது: பிரதமர் மோடி

சமூக வளர்ச்சியில் பிம்ஸ்டெக்கின் பங்கு அளப்பரியது: பிரதமர் மோடி

UPDATED : ஜூலை 14, 2024 12:00 AMADDED : ஜூலை 14, 2024 08:37 PM


Google News
புதுடில்லி:
பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும் இயந்திரமாக பிம்ஸ்டெக் அமைப்பு செயல்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய ஏழு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு ஒன்றிணைக்கிறது. இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு புதுடில்லியில் நடந்தது.

மாநாட்டின் நிறைவு நாளில் பிம்ஸ்டெக் வெளியுறவு அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


போக்குவரத்து இணைப்பு, எரிசக்தி, வர்த்தகம், சுகாதாரம், வேளாண்மை, அறிவியல், பாதுகாப்பு, மக்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் உள்ளிட்டவற்றில் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து, அமைச்சர்கள் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் இயந்திரமாக பிம்ஸ்டெக் அமைப்பு செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

அமைதியான, வளமான, பாதுகாப்பான பிம்ஸ்டெக் பிராந்தியத்திற்கான இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் கொள்கையையும், கிழக்கத்திய நாடுகள் தொடர்பான கொள்கையையும் விவரித்த பிரதமர், இந்தியாவின் கொள்கைகள் இந்த மண்டலத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வையை உடையது என எடுத்துரைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தன் சமூக வலைதள பக்கத்தில், பிம்ஸ்டெக் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளித்ததாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் வரும் செப்.,ல் நடக்கவுள்ள இந்த அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு இந்தியா முழு ஆதரவை வழங்குவதாகக் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us