Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பெண்கள் பள்ளி அருகே சுகாதாரக்கேடு:15 நாட்களில் சரிசெய்ய நீதிபதி உத்தவு

பெண்கள் பள்ளி அருகே சுகாதாரக்கேடு:15 நாட்களில் சரிசெய்ய நீதிபதி உத்தவு

பெண்கள் பள்ளி அருகே சுகாதாரக்கேடு:15 நாட்களில் சரிசெய்ய நீதிபதி உத்தவு

பெண்கள் பள்ளி அருகே சுகாதாரக்கேடு:15 நாட்களில் சரிசெய்ய நீதிபதி உத்தவு

UPDATED : அக் 25, 2024 12:00 AMADDED : அக் 25, 2024 09:49 AM


Google News
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சட்டவிழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பொது மக்கள் புகாரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ஆய்வு செய்து அங்கிருக்கும் சுகாதாரக்கேடுகளை 15 நாளில் சரி செய்ய மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரனுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா உத்தரவிட்டார்.

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா தலைமை வகித்தார். சார்வு நீதிபதி திரிவேணி முன்னிலை வகித்தார். பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்த மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் பின்புறத்தில் செயல்படும் திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பல ஆண்டுகளாக காம்பவுண்ட் பகுதியில் அப்பகுதியினர் சிறுநீர் கழித்து மக்கள் நடமாடவே முடியாத அளவிற்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதாவிற்கு புகார் வந்தது. அதனடிப்படையில் நேற்று அவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் ஆய்வு செய்தார்.

உடனே அங்கிருந்த சுகாதாரக்கேடுகளை 15 நாளில் சரி செய்து அப்பகுதியை துாய்மையாக மாற்றி தொடர்ந்து இதுபோன்று நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரனுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து பள்ளிக்கு சென்று அங்குள்ள

மாணவிகள் மத்தியில் சட்டம் சம்பந்தபட்ட கருத்துக்களை பறிமாறினார். திண்டுக்கல்அபிராமி அம்மன் கோயில் பின்புறம் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா ஆய்வு செய்து அங்குள்ள சுகாதாரக்கேடுகளை அகற்ற மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரனுக்கு உத்தரவிட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us