Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துபாயில் காலநிலை மாற்றம் தொடர்பான குறும்படத்துக்கு சிறப்பு விருது

துபாயில் காலநிலை மாற்றம் தொடர்பான குறும்படத்துக்கு சிறப்பு விருது

துபாயில் காலநிலை மாற்றம் தொடர்பான குறும்படத்துக்கு சிறப்பு விருது

துபாயில் காலநிலை மாற்றம் தொடர்பான குறும்படத்துக்கு சிறப்பு விருது

UPDATED : ஏப் 19, 2024 12:00 AMADDED : ஏப் 19, 2024 10:41 AM


Google News
துபாய்:
காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்ப மயமாதல் குறித்த குறும்படமான காலம் மாறுமா (சென்னை வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்ட கதை) 2024 ம் ஆண்டிற்கான அமீரக தமிழ் குறும்பட விழாவில் சிறந்த படத்துக்கான சிறப்பு விருதை பெற்றது.

துபாய் இரானியன் கிளப்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நடுவராகப் பங்கேற்ற நடிகை குட்டி பத்மினி இக்குறும்படத்தை உருவாக்கிய துபாயில் வசிக்கும் தமிழக மாணவர்களாகிய அனன்யா மணிகண்டன் மற்றும் ஷியாம் மணிகண்டனை சிறிய வயதிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை உண்டாக்கியதற்காகப் பாராட்டினார்.

மேலும் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன், இது ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்கு மற்றும் குறிக்கோளின் 13வது இலக்குஆகும் என்றும் அதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட இந்த குறும்படத்தையும் மாணவர்களது முயற்சியையும் பாராட்டினார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us