Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி

அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி

அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி

அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி

UPDATED : அக் 11, 2024 12:00 AMADDED : அக் 11, 2024 11:17 AM


Google News
நாமக்கல்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, வரும், 22ல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை (செப்., 15) முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, தனித்தனியே பேச்சு போட்டி, வரும், 22ல், நாமக்கல் தெற்கு அரசு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆறு முதல், பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான, பேச்சு போட்டி, காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணி வரையும், கல்லுாரி மாணவர்களுக்கு, பகல், 1:30 மணிக்கும் துவங்குகிறது.

போட்டியில் வெற்றி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு, தலா, 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.மேலும், அரசு பள்ளி மாணவர்கள், 2 பேர் தனியாக தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசாக, தலா, 2,000 ரூபாய் வழங்கப்படும். விபரங்களுக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டடத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை, 04286-292164 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us