Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ துணைவேந்தர் நியமன விவகாரத்தில் கவர்னரின் நோக்கம் செல்லாது: சொல்கிறார் உயர் கல்வித்துறை அமைச்சர்

துணைவேந்தர் நியமன விவகாரத்தில் கவர்னரின் நோக்கம் செல்லாது: சொல்கிறார் உயர் கல்வித்துறை அமைச்சர்

துணைவேந்தர் நியமன விவகாரத்தில் கவர்னரின் நோக்கம் செல்லாது: சொல்கிறார் உயர் கல்வித்துறை அமைச்சர்

துணைவேந்தர் நியமன விவகாரத்தில் கவர்னரின் நோக்கம் செல்லாது: சொல்கிறார் உயர் கல்வித்துறை அமைச்சர்

UPDATED : ஜன 02, 2025 12:00 AMADDED : ஜன 02, 2025 05:37 PM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்: துணைவேந்தர் நியமன விவகாரத்தில் கவர்னரின் நோக்கம் செல்லாது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் செழியன் கூறினார்.

தஞ்சாவூரில், உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:


தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் செயல்பாடு என்ன என்பதை இந்தியா உற்று நோக்குகிறது. ஒவ்வொரு மாநில கவர்னர்களும் உரிமை என்ன, கடமை என்ன என்பதை அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நெறிமுறைகளில் சொல்லி இருக்கிறது. அதை மீறும் வகையில்,கவர்னரின் செயல்பாட்டினால் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது.

துணைவேந்தர் நியமனத்தில், மூன்று உறுப்பினர்கள் தேர்வு குழு என்பதை நான்காக அதிகரிப்பதன் மூலம் அதை செயல்பட விடாமல் தடுப்பது தான் கவர்னரின் நோக்கமாக உள்ளது. இது நிறைவேறாது. முறைப்படி எல்லா நடவடிக்கை எடுக்கப்பட்டு துணைவேந்தர் நியமனம் செய்யபடும்.

மாணவர்களின் நலனில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம். மாணவர்கள் நலன் கருதி சிந்திக்கின்ற செயல்படுகின்ற முதல்வராக நமது முதல்வர் உள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us