Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு எழுதும் நேரம்!

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு எழுதும் நேரம்!

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு எழுதும் நேரம்!


UPDATED : செப் 06, 2024 12:00 AM

ADDED : செப் 06, 2024 02:35 AM

Follow on Google

UPDATED : செப் 06, 2024 12:00 AM ADDED : செப் 06, 2024 02:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
குரூப் 2 தேர்வை எழுத தேர்வு மையத்துக்கு எத்தனை மணிக்கு வர வேண்டும் என்ற முக்கிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.
கனவு வேலை
சர்க்கார் வேலை என்பது ஒவ்வொருவரின் கனவு. எப்படியாவது அரசு உத்யோகத்தில் உட்கார்ந்துவிட வேண்டும் என இன்றும் லட்சக்கணக்கான இளைய தலைமுறையினர் படித்து வருகின்றனர். அவர்களின் கனவுகளை நனவாக்க ஏதுவாக, 2,327 காலிப் பணியிடங்களை நிரப்ப குரூப் 2 குரூப் 2ஏ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளன.
ஹால் டிக்கெட்
கிட்டத்தட்ட 7 லட்சத்து 93 ஆயிரத்து 962 பேர் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்வு வரும் 14ம் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ 2,763 மையங்களில் நடக்கிறது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கை
தேர்வெழுத மும்முரமாக தயாராகி வரும் 7 லட்சம் பேரும் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதாவது தேர்வு தொடங்கும் நேரம், தேர்வுக்கூட அறைக்குள் தேர்வர் எத்தனை மணிக்குள் இருக்க வேண்டும் என்ற முக்கியமான விஷயங்களை அறிக்கை மூலம் பட்டியலிட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு:
தேர்வு நேர அட்டவணை
தேர்வு மையத்துக்குள் வரவேண்டிய நேரம்: காலை 8.30 மணி
சலுகை அளிக்கும் நேரம்: காலை 9.00 மணி வரை (30 நிமிடங்கள் மட்டுமே)
தேர்வு தொடங்கும் நேரம்: காலை 9.30 மணி
* தேர்வு எழுதும் அனைவரும் சரியான நேரத்துக்கு தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டும். 30 நிமிடங்கள் சலுகை நேரத்துக்கு பின்னர் எந்த ஒரு தேர்வரும் தேர்வறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்.
* தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டுடன் தேர்வு மையத்துக்கு வரவேண்டும். ஹால் டிக்கெட் இல்லாத யாருக்கும் தேர்வு எழுத அனுமதி கிடையாது. ஆதார் அட்டை, பாஸ்போர்ட், லைசென்ஸ், பான் அல்லது வாக்காளர் அடையாள அட்டை என ஏதாவது ஒன்றின் ஒளி நகலை கொண்டு வர வேண்டும்.
* ஹால் டிக்கெட்டில் தேர்வு எழுதுவோரின் போட்டோ அச்சிடாமல் இருந்தால், தெளிவாக இல்லாமல் இருந்தால் அல்லது தேர்வர்களின் தோற்றத்துடன் பொருந்தாமல் இருந்தால் பாஸ்போர்ட் போட்டோ ஒன்றை வெள்ளைத்தாளில் ஒட்டி அதில் தனது விவரங்களை பதிவு செய்து கையொப்பமிட வேண்டும். பின்னர் ஹால் டிக்கெட் நகல், ஆதார், பான், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை என ஏதேனும் ஒரு அட்டையின் நகலை இணைத்து தலைமை கண்காணிப்பாளரிடம் ஒப்பம் பெற்று சமர்ப்பித்து தேர்வு எழுதலாம்.
* ஹால் டிக்கெட்டில் உள்ள தமது விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* கருமை நிற பேனா (Ball Point Pen) மட்டுமே தேர்வெழுத பயன்படுத்த வேண்டும்.
* செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், புத்தகங்கள், கைப்பைகள் தேர்வறையில் அனுமதிக்கப்படாது.
8.30 மணி

ஒவ்வொரு முறை டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதும் போதும் தேர்வு மையத்துக்கு வரும் நேரம் மிக முக்கியமானது. காலை 9 மணிக்கு தேர்வு மையம் வந்தால் போதும் என்று நினைக்காமல் 8.30 மணிக்குள் தயாராக வந்துவிட வேண்டும் என்பதை கல்வியாளர்கள் மீண்டும் ஒரு முறை போட்டியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். 9 மணி என்று எண்ணி, அதற்கு பின்னர் 30 நிமிடங்கள் சலுகை நேரம் கிடைக்கும் என்று அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap