Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளா அரசு தொடர் முயற்சி: வைகோ

முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளா அரசு தொடர் முயற்சி: வைகோ

முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளா அரசு தொடர் முயற்சி: வைகோ

முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளா அரசு தொடர் முயற்சி: வைகோ

ADDED : அக் 15, 2025 04:55 AM


Google News
Latest Tamil News
சென்னை,: 'முல்லைப் பெரியாறு அணையை உடைக்க, கேரளா அரசு தொடர் முயற்சி செய்கிறது' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:


முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, 'கேரள பாதுகாப்பு பிரிகேட்' என்ற தன்னார்வ நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் ரசூல் ஜோய் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், 'தேசிய மற்றும் சர்வதேச அணை பாதுகாப்பு நிபுணர்களை வைத்து, முல்லைப் பெரியாறு அணையின் முழுமையான பாதுகாப்பு மதிப்பீடு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், அணையின் சீரமைப்பு நடவடிக்கைகளையும், சாத்தியமானால் அணையை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையையும் எடுக்க உத்தரவிட வேண்டும்.

'பெரியாறு அணை அதிக தீவிரம் கொண்ட நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது. நிபுணர்களின் சமீபத்திய ஆய்வுகள், அந்த அணை, கட்டமைப்பு ரீதியாக ஆபத்தான நிலையில் இருப்பதை காட்டுகின்றன. அணை உடைந்தால் கேரளத்தின் 6 மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும்' என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கவாய், 'அணையை வலுப்படுத்த சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் அல்லது அதை மதிப்பிடுவதற்கு ஒரு நிபுணர் குழு நியமிக்கலாம் அல்லது புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயலாம்' என தெரிவித்துள்ளார்.

அவரது கருத்து தமிழகத்திற்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும்.

எனவே, முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசு, இதுபோன்ற அமைப்புகள் வாயிலாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பது கண்டனத்துக்குரியது. கேரள அரசின் இச்சதித் திட்டத்தை, தமிழக அரசு முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us