Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/எதிர்பார்த்த கூட்டம் சேராததால் 'அப்செட்'டில் பழனிசாமி

எதிர்பார்த்த கூட்டம் சேராததால் 'அப்செட்'டில் பழனிசாமி

எதிர்பார்த்த கூட்டம் சேராததால் 'அப்செட்'டில் பழனிசாமி

எதிர்பார்த்த கூட்டம் சேராததால் 'அப்செட்'டில் பழனிசாமி

ADDED : டிச 02, 2025 04:30 AM


Google News
Latest Tamil News
கோபியில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பதில் அளிக்கும் வகையில், நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்துக்கு, போதிய ஆட்கள் சேராததால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி 'அப்செட்' ஆகியுள்ளார்.

இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க., வில் சேர்ந்ததால் கடும் கோபம் அடைந்த பழனிசாமி, செங்கோட்டையனின் கோபி தொகுதியில் உள்ள நல்லகவுண்டன்பாளையத்தில் நேற்று முன்தினம் கூட்டம் நடத்தினார்.

செங்கோட்டையனுக்கு அவரது தொகுதியிலேயே பதிலடி கொடுப்பதற்காக நடந்த இந்த கூட்டத்துக்கு, பழனிசாமி எதிர்பார்த்த அளவில் கூட்டம் சேரவில்லை.

கூட்டத்தில் பங்கேற்க முன்கூட்டியே வந்து, கல்வி நிறுவனம் ஒன்றில் பழனிசாமி காத்திருந்தார். ஓரளவுக்கு கூட்டம் கூடிய தகவல் அறிந்த பிறகே, பொதுக்கூட்டத்துக்கு வந்தார். எனினும், கடைசி வரை பெரிய அளவில் கூட்டம் வராததால், பழனிசாமி 'அப்செட்'டாகி சென்றுள்ளார்.

அதே நேரத்தில், கோபியில் நடத்திய கூட்டத்துக்கு 50,000 பேர் வந்ததாக, அ.தி.மு.க., தலைமைக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. ஆனால், கூட்டத்துக்கு, 5,000 பேர் கூட வரவில்லை. மேலும், செங்கோட்டையனோடு த.வெ.க., விற்கு சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.,வுக்கு திரும்புவர் என கூறப்பட்டதும் நடக்காததால், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us