Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ அமைதியே வெற்றிக்கான அறிகுறி சொல்கிறார் செங்கோட்டையன்

அமைதியே வெற்றிக்கான அறிகுறி சொல்கிறார் செங்கோட்டையன்

அமைதியே வெற்றிக்கான அறிகுறி சொல்கிறார் செங்கோட்டையன்

அமைதியே வெற்றிக்கான அறிகுறி சொல்கிறார் செங்கோட்டையன்

ADDED : அக் 04, 2025 05:59 AM


Google News
Latest Tamil News
சென்னை : ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள், 13 பேர், அ.தி.மு.க., கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப் பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:


ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட இளைஞரணி பொருளாளர் சதீஷ், மாணவரணி மாவட்ட செயலர் குருராஜ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலர்கள் தனகோட்டிராம், மவுதீஸ்வரன், ஐ.டி., பிரிவு மாவட்ட துணைத் தலைவர் மனோஜ்குமார், இணைச் செயலர் முத்துரமணன், வர்த்தகர் அணி மாவட்ட இணைச் செயலர் ராஜா சம்பத் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் என 13 பேர், கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட இணை செயலர் ரேவதிதேவி, மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலர் பழனிசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலர் சசிபிரபு, துணை செயலர் ராஜாசம்பத், இளைஞரணி மாவட்ட செயலர் குருராஜ், மாணவரணி மாவட்ட செயலர் பிரதீப் உட்பட 43 பேர் புதிதாக பொறுப்புகளில் நியமிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அ.தி.மு.க.,வில் பிரிந்தவர்களை ஒன்றிணைக்குமாறு காலக்கெடு விதித்த, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகளை ஏற்கனவே, பழனிசாமி பறித்தார். மேலும், செங்கோட்டையனின் ஆதரவாளர்களையும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி வருகிறார்.

கடந்த செப்.30ல், 40 பேரின் பதவிகளை பறித்த பழனிசாமி, நேற்று மேலும் 13 பேரை பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார்.

அமைதியே வெற்றிக்கான அறிகுறி! முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு விஷயத்தில் திடீர் அமைதி ஏன் என்று கேட்கின்றனர். அமைதி என்பது வெற்றிக்கான அறிகுறி. திட்டமிட்டப்படி அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு நடக்குமா என்பது குறித்து, பொதுச்செயலர் பழனிசாமி தான் சொல்ல வேண்டும். கோபி வழியாக நீலகிரி சென்ற பொதுச்செயலர் பழனிசாமியை நான் வரவேற்க செல்லவில்லை என கூறுகின்றனர். அப்போது, நான் சென்னை சென்றிருந்தேன். ஆனாலும், அவருடைய வருகை குறித்து எனக்கு எந்த தகவலும் சொல்லப்படவில்லை. ஏதோ முடிவெடுத்து களம் இறங்கி விட்டார்; ஆனால், வழி தெரியாமல் உள்ளார் என என்னைக் குறித்து கூறுகின்றனர். எனக்கு வழிகாட்டிய எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., ஆகியோரின் வழியில் நான் சென்று கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us