Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ தி.மு.க.,வில் காங்., நிர்வாகி சேர்ப்பு கூட்டணியில் மீண்டும் சலசலப்பு

தி.மு.க.,வில் காங்., நிர்வாகி சேர்ப்பு கூட்டணியில் மீண்டும் சலசலப்பு

தி.மு.க.,வில் காங்., நிர்வாகி சேர்ப்பு கூட்டணியில் மீண்டும் சலசலப்பு

தி.மு.க.,வில் காங்., நிர்வாகி சேர்ப்பு கூட்டணியில் மீண்டும் சலசலப்பு

Latest Tamil News
விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சுரேந்திரனை தி.மு.க.,வில் சேர்த்துள்ளதால், தி.மு.க., கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், கரூர் நகர காங்கிரஸ் நிர்வாகி கவிதா, தி.மு.க.,வில் இணைந்தார். இது, தி.மு.க., - காங்., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக இரு கட்சிகளும் கூட்டணியாக இருக்கும் நிலையில், காங்., நிர்வாகியை தி.மு.க.,வில் எப்படி சேர்க்கலாம் என, கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி மற்றும் காங்கிரசார் கொந்தளித்தனர்.

ஒரு வழியாக இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், விருதுநகர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவாசன் முன்னிலையில், விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சுரேந்திரன் நேற்று தி.மு.க.,வில் சேர்ந்துள்ளார். இதையடுத்து, சுரேந்திரனை இளைஞர் காங்கிரசில் இருந்து நீக்குவதாக, தமிழக இளைஞர் காங்., தலைவர் சூர்யபிரகாஷ் அறிவித்துள்ளார்.

காங்., நிர்வாகிகளை தங்கள் கட்சியில் சேர்த்து வரும் தி.மு.க.,வின் நடவடிக்கைக்கு, தமிழக காங்கிரசில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. தமிழக காங்., மூத்த துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய தொடர் கதையாக, காங்., சுரேந்திரனை, தி.மு.க.,வில் அக்கட்சியின் எம்.எல்.ஏ., சீனிவாசன் இணைத்துள்ளார். சுரேந்திரனிடம், 'அங்கு இருந்தால் என்ன; இங்கு இருந்தால் என்ன; காங்கிரசிலேயே இருங்கள்' என புத்திமதி சொல்லி, அனுப்பி இருக்க வேண்டும்.

அப்படி செய்யாமல், அவரை தி.மு.க.,வில் சேர்த்திருப்பது, திட்டமிட்ட செயலா என்ற எண்ணம் தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சியை பலவீனம் அடையச் செய்ய நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதேபோல், 'தி.மு.க., நிலைப்பாடு தான், காங்., நிலைப்பாடு; தி.மு.க., நிலைப்பாடு தான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு' என, தி.மு.க., - எம்.பி., ராஜா பேசியிருப்பதும் கண்டிக்கத்தக்கது. திராவிடர் கழக நிலைப்பாட்டை, காங்., ஏற்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற பேச்சை அவர் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us