ADDED : ஜூலை 30, 2024 05:20 AM

வில்லியனுார்: வில்லியனுார் ஆயுஷ்மான் மருத்துவமனை மற்றும் மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் சார்பில் முதியோர் நல மருத்துவ முகாம் நடந்தது.
வில்லியனுார் அன்னை மருத்துவமனையில் நடந்த மருத்துவ முகாமிற்கு மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முகாமை துவக்கிவைத்தார். ஆயுஷ்மான் மருத்துவமனை தலைமை டாக்டர் ஜீவா ஆனந்த், கண் மருத்துவர் வைஷாலி, யோகா பயிற்சியாளர் வனிதாம்பிகை மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்று 200க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் வில்வம் பவுண்டேசன் அழகப்பன், வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்ற நிறுவனர் இராமன், பரசுராமன், ரஜினிமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மூத்த குடிமக்கள் சங்க செயலாளர் சின்னப்பன் நன்றி கூறினார்.