/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுற்றுச்சூழல் தின விழா; பசுமை ஆர்வலர்கள் உற்சாகம் சுற்றுச்சூழல் தின விழா; பசுமை ஆர்வலர்கள் உற்சாகம்
சுற்றுச்சூழல் தின விழா; பசுமை ஆர்வலர்கள் உற்சாகம்
சுற்றுச்சூழல் தின விழா; பசுமை ஆர்வலர்கள் உற்சாகம்
சுற்றுச்சூழல் தின விழா; பசுமை ஆர்வலர்கள் உற்சாகம்
ADDED : ஜூன் 10, 2024 06:57 AM

புதுச்சேரி : இந்திய இளைஞர் விடுதிகள் சங்கம், காலாப்பட்டு கிளை சார்பில் சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
இந்த நிகழ்வில் பசுமையான சூழலையும், அலங்காரத்தையும் உருவாக்க மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகள் அடங்கிய விரிவுரை அமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்திய இளைஞர் விடுதிகள் சங்க புதுச்சேரி மாநிலத் பேரவை தலைவர் சரவணன் தலைமையேற்று, சுற்றுச்சூழலின் முக்கிய பங்கு மற்றும் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார். மேலும் பூங்காவில், 6 மரகன்றுகள் நடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநிலத் துணைத் தலைவர் செந்தில் குமார் மற்றும் பெண்கள் கிளையின் தலைவர் சாந்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, வருங்கால சந்ததியினருக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உரை ஆற்றினார்.
காலாப்பட்டு கிளை அமைப்பு செயலாளர் அருண் நாகலிங்கம், தன்னார்வ தொண்டர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.