ADDED : ஜூலை 27, 2026 08:01 PM
நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ரகளையில் ஈடுப்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கடலுார் மாவட்டம் லட்சுமிநாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக் 37, என்பவர் மது போதையில், கரியமாணிக்கம் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுப்பட்டார். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதேபோல் மதகடிப்பட்டு சந்திப்பு பகுதியில் ரகளையில் ஈடுப்பட்ட விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த வீரமுத்து, 36; வில்லியனுார்–கூடப்பாக்கம் சாலையில் மதுபோதையில் ;பொதுமக்களிடம் ரகளையில் ஈடுப்பட்ட வாழபட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன், 46; ஆகியோரை அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
