/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் 30 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது டாக்டர் ஆனந்தராஜ் அதிர்ச்சி தகவல் புதுச்சேரியில் 30 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது டாக்டர் ஆனந்தராஜ் அதிர்ச்சி தகவல்
புதுச்சேரியில் 30 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது டாக்டர் ஆனந்தராஜ் அதிர்ச்சி தகவல்
புதுச்சேரியில் 30 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது டாக்டர் ஆனந்தராஜ் அதிர்ச்சி தகவல்
புதுச்சேரியில் 30 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது டாக்டர் ஆனந்தராஜ் அதிர்ச்சி தகவல்
ADDED : ஜூலை 27, 2024 04:57 AM

புதுச்சேரி: இந்தியாவில் 20 கோடி பேருக்கு மேல் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது என இருதய நோய் சிகிச்சை நிபுணர் ஆனந்தராஜ் பேசினார்.
இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று நடந்த தொடர் மருத்துவ கருத்தரங்கை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து உயர் ரத்த அழுத்தத்திற்கான சிகிச்சை முறைகள் என்ற தலைப்பில் அரசு மருத்துவமனை இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்தராஜ் பேசுகையில் இந்தியாவில் 20 கோடி பேருக்கு மேல் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது. புதுச்சேரியில் 30 சதவீதம் பேருக்கு இந்த பாதிப்பு உள்ளது. மன அழுத்தம், உணவு முறை மாற்றம்,மது அருந்துதல், புகைபிடித்தல்,உடல் பருமன், சரியான துாக்கமின்மை,சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
கண் பாதிப்பு, பக்கவாதம் ஏற்படுதல், நீரிழிவு, இருதயநோய்கள், மற்றும் சிறுநீரகம் பாதிப்பு ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும். இதில் சிறுநீரகத்தில் ஏற்படும் செயலிழப்பை அதற்கு செல்லும் நரம்பில் சில சிகிச்சை முறைகள் செய்து செயலிழப்பை தடுக்கலாம்.மேலும் சரியான உணவு முறைகள், உடற்பயிற்சி, தியானம் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து எடுத்து கொள்வது உள்ளிட்டவைகளால் இந்த நோய் பாதிப்பை கட்டுப்படுத்தி வழக்கமான பணிகளில் ஈடுபடலாம்.
இதில் குறைவானவர்களே உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்கான சிகிச்சையை எடுத்து கொள்கின்றனர். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இதற்கான சிகிச்சைகள் உள்ளது என இவ்வாறு அவர் கூறினார். கருத்தரங்கில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஸா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறைதீர் அதிகாரி ரவி மற்றும் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.