/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் தாலி செயின் பறிப்பு; புதுச்சேரியில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் தாலி செயின் பறிப்பு; புதுச்சேரியில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் தாலி செயின் பறிப்பு; புதுச்சேரியில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் தாலி செயின் பறிப்பு; புதுச்சேரியில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் தாலி செயின் பறிப்பு; புதுச்சேரியில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
ADDED : ஜூலை 31, 2024 04:03 AM

புதுச்சேரி : புதுச்சேரியில், கோவிலுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் 5 சவரன் தாலி செயினை பறித்து சென்ற முகமூடி கொள்ளை யர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டைகுறிஞ்சி நகர், 7வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர்அன்புமணி; தனியார் மதுபான குடோன் ஊழியர்.
இவரது மனைவி கீதா, 49; நேற்று முன்தினம் மாலை 5:45மணிக்கு,ஆடி மாத கிருத்திகை என்பதால், குறிஞ்சி நகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு நடந்துசென்று கொண்டிருந்தார். 9வது குறுக்குத் தெரு சந்திப்பு அருகே சென்றபோது, பைக்கில் முகமூடி அணிந்த வந்த இருவரில் ஒருவர் சற்று துாரத்தில் பைக்குடன் நின்றிருந்தார். மற்றொருவர் நடந்து சென்று, கீதா கழுத்தில் அணிந்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 5 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு ஓடினார். திடுக்கிட்ட கீதா கூச்சலிட்டபடி ஓடினார். உடன்அங்கிருந்தவர்கள் பைக் மூலம் மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர்.
ஆனால், அதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றனர். கீதா புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குபதிந்து முகமூடி கொள்ளை யர்களை தேடி வருகின்றனர்.
கீதாவிடம் முகமூடி ஆசாமிகள் செயின் பறிக்கும் சி.சி.டி.வி., பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.