ADDED : ஜூலை 26, 2024 04:23 AM

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் மேயர் ராமலிங்க கவுண்டர் அரசு தொடக்கப் பள்ளியில் முன் மழலையர் செயல்பாட்டு மையம், காய்கறி தினம், பள்ளி நுாலகம் திறப்பு என, முப்பெரும் விழா நடந்தது.
ஆசிரியர் கலைவாணி வரவேற்றார். வட்டம் 2 பள்ளி துணை ஆய்வாளர் குணசுந்தரி முன் மழலையர் செயல்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். மையத்தின் முக்கியத்துவும் குறித்து சுரேஷ், பவுலின் ஆகியோர் பெற்றோர்களுக்கு விளக்கினர்.
விழாவில் மாணவர்கள் காய்கறி உடை அணிந்து வந்தனர். பெற்றோர்கள் காய்கறிகளை கொண்டு பலவகை உருவகங்களை செய்து வந்திருந்தனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சரோஜா, சித்ரா ஆகியோர் செய்திருந்தனர். தலைமை ஆசிரியர் சாவித்திரி நன்றி கூறினார்.