/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீஸ் சார்பில் பெட்ரோல் பங்க் திறக்கப்படும் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் தகவல் போலீஸ் சார்பில் பெட்ரோல் பங்க் திறக்கப்படும் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் தகவல்
போலீஸ் சார்பில் பெட்ரோல் பங்க் திறக்கப்படும் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் தகவல்
போலீஸ் சார்பில் பெட்ரோல் பங்க் திறக்கப்படும் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் தகவல்
போலீஸ் சார்பில் பெட்ரோல் பங்க் திறக்கப்படும் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் தகவல்
ADDED : ஜூலை 10, 2024 04:29 AM

புதுச்சேரி, : புதுச்சேரி போலீஸ் நலச்சங்கத்தின் நிதியை பெருக்க, பெட்ரோல் பங்க் திறக்கப்படும் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் தெரிவித்தார்.
புதுச்சேரி காவலர்களுக்கான நலச்சங்கத்தின் 37வது பொதுக்குழு கூட்டம், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்தது. சங்கத்தின் தலைவர் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் (பொ) சீனியர் எஸ்.பி., கலைவாணன் முன்னிலை வகித்தார். டி.ஐ.ஜி. பிரிஜேந்திரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொருளாளர் எஸ்.பி.க்கள், ரங்கநாதன், செயற்குழு உறுப்பினர் பக்தவச்சலம் ஆகியோர், கடந்த ஆண்டு பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்று பட்டது குறித்து பேசியதுடன், நிதி அறிக்கையை தாக்கல் செய்தனர். தொடர்ந்து, இந்த நிதியாண்டில் மேற்கொள்ள வேண்டிய திட்ட பணிகள் குறித்து காவலர்களின் ஆலோசனை கேட்கப்பட்டது. போலீசார் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
காவலர் நலச்சங்கத்தின் மூலம் பெறும் கடன் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும். திருமணம் கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஹெல்மெட் அவசியம்
அதற்கு பதில் அளித்த டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ், கடந்த ஆண்டு மட்டும் 14 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் வங்கியில் தனி நபர் கடன் உட்பட பல கடன் வாங்கி குடும்பத்தை கடனில் தள்ளியுள்ளனர். இதனால் தனி நபர் கடன்கள் பெறுவதை தவிர்க்க வேண்டும். காவலர்கள் பைக் ஓட்டிச் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.
கடந்த ஆண்டு 68 பேர் விபத்தின் மூலம் இறந்ததில், 2 போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் விபத்தில் இறந்துள்ளனர். அதனால் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிவது அவசியம். காவலர் நலச்சங்கத்தில் ரூ. 2.5 கோடி கடன் வழங்கப்பட்டது. இதில், ரூ. 50 லட்சம் வரை மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது.
காவலர் நலச்சங்கத்தின் நிதியை உருவாக்க பெட்ரோல் பங்க் துவக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைத்ததும் விரைவில் திறக்கப்படும்' என்றார்.