தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரியூர் ராமச்சந்திரா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

அரியூர் ராமச்சந்திரா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

அரியூர் ராமச்சந்திரா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை


ADDED : மே 15, 2024 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2024 01:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார் : அரியூர் ஸ்ரீராமச்சந்திரா ஆங்கில உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

ராமச்சந்திரா வித்யாலயா உயர்நிலைப்பள்ளி சார்பில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 95 மாணவர்கள் எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளியில் குணசுந்தரேசன் 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். இவர் தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 100 மதிப்பெண்களை பெற்றார்.

மாணவர் கருணாகரன் மற்றும் மாணவி ஹரிதா ஆகியோர் 488 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், தேவஆனந்த் 486 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

தமிழில் 8 மாணவர்கள் 98 மதிப்பெண், ஆங்கிலத்தில் 5 பேர் 99, கணிதத்தில் 5 பேர் 100க்கு 100 மதிப்பெண், சமூக அறிவியல் 4 மாணவர்கள் 100க்கு 100 பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் சங்கரநாராயணன், நிர்வாக அலுவலர் ராம்பிரசாத் ஆகியோர் பாராட்டினர்.

தேர்ச்சி குறித்து தாளாளர் சங்கரநாராயணன் கூறுகையில், 'இப்பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்து வருகிறது.

இந்த வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் நன்றி' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us